பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மக்களில் ஒரு பகுதியினர் தயாராகி விட்டனர். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் ஆகியவற்றின் பெயரால் அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கின்றனர். பணம் இருந்தால் எல்லாம் நடந்து விடும் என்று நினைக்கிறார்கள். பணக்காரர்களின்வாழ்க்கையைப் பார்த்து, அதில் மயங்கி, தங்களையும் பணக்காரர்களாக்கிக் கொள்ள துடிக்கிறார்கள். படிப்பவர்களும் கூட சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அப்படி சம்பாதிக்கும் பணத்தில், மார்க்கவிதிகளுக்கு மாறாக, குடி, விபசாரம் போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள். காதல் என்ற போதையில் சிக்கி, தங்களைத் தாங்களே சீரழித்துக் கொள்கிறார்கள்.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இன்டர்நெட்டை சீரழிவு சாதனமாக மாற்றிக் கொள்கிறார்கள்.இறுதியில், பல இன்னல்களுக்கும், நோய்களுக்கும் ஆளானபிறகு, இறைவா! என்னைச் சோதித்து விட்டாயே என்றுகதறுகிறார்கள்.குர் ஆனில் சொல்லப்பட்டுள்ளதைக் கேளுங்கள்.மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ, அதன் (பணம்) காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்.மனிதனின் நிலை எப்படி இருக்கிறதெனில், அவனுடைய இறைவன் அவனைக் கண்ணியப்படுத்தி அருட்கொடைகளையும் வழங்கினால், என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று கூறுகின்றான். மேலும், அவனை சோதிக்க நாடினால், மேலும் அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால், என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான் என்று கூறுகின்றான்.பணத்தாசையால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதை மேற்கண்டவசனங்கள் வலியுறுத்துகின்றன. இன்னும் வேண்டுமா இந்த ஆசை!