அவிநாசி: அம்மா பகவான் ஜென்ம தினத்தையொட்டி, அவிநாசியில், பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந் தது. அவிநாசி கரிவரதராஜ பெருமாள் கோவில் முன் துவங்கிய ஊர்வலம், கிழக்கு, வடக்கு ரத வீதி, கச்சேரி வீதி, சேவூர் ரோடு வழியாக பார்க் வீதி சென்றடைந்தது. அங்கு, அம்மா பகவானுக்கு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர் ஒருவர், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தார். அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த அம்மா பகவான் பக்தர்கள் பங்கேற்றனர்.