வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் இன்று மகா ருத்ராபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2014 12:03
புதுச்சேரி: வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு இன்று மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது.குயவர்பாளையம் ஐயனார் நகரில் வெள்ளந்தாங்கி அய்யனார் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் எழுந்தருளியுள்ள காசி விசாலாட்சி அம்பிகை சமேத காசி விஸ்வநாதருக்கு, மகா ருத்ராபிஷேக விழாவுக்கு இன்று 10ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி இன்று காலை 6.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, பஞ்சகவ்ய பூஜை, கலச ஆவாஹணம் நடக்கிறது. காலை 7.௦௦ மணிக்கு அக்னி மகாருத்ர ஜப பாராயணம், மங்கள திவ்யம், மகா பூர்ணாஹூதி, சதுர்வேதம் நடக்கிறது. காலை 9.௦௦ மணிக்கு 11 ஆவர்த்தி ருத்ராபிஷேகம், 12.௦௦ மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.