பந்தலூர்: ஆன்மிக சக்தி ஒன்றினால் மட்டுமே மனித சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற இயலும் என, தெரிவிக்கப்பட்டது. பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், பந்தலூரில் 78வது திரிமூர்த்தி சிவ ஜெயந்தி விழா நடந்தது. நிர்வாகி ரேணுகா அனைவரையும் வரவேற்றார். ராஜேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்,""தினசரி 10 நிமிடங்கள் செலவிட்டால் ஆன்மிக சக்தியும், மன அமைதியும் பெருகும். ஆன்மிக சக்தி ஒன்றினால் மட்டுமே மனித சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற இயலும். சிவராத்திரியிலிருந்து தொடர்ந்து 15நாட்கள் பல்வேறு இடங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது, என்றார். எம்.எல்.ஏ. திராவிடமணி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஜெயசங்கர், பிரைட் பியூச்சர் அகாடமி முதல்வர் அன்பரசி மற்றும் பிரம்மகுமாரிகள் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நிர்வாகி ரமேஷ் நன்றி கூறினார்.