எண் கண் ஆதி நாராயணப் பெருமாள் கோயிலில் மூலவர் பெருமாள் கருடாழ்வார் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். திருவாரூரிலிருந்து தஞ்சைக்குப் போகும் சாலையில் பத்து கிலோமீட்டர் துரத்தில் உள்ள இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானும் விசேஷமானவர். பார்வைக் கோளாறுகள் உள்ளவர்கள் இவரை தரிசித்து வேண்டிக் கொள்ள குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை!