கிருஷ்ணர் பார்த்தனுக்கு சாரதியாக இருந்து கீதை உபதேசித்த காட்சி, பாரியூர் ஆதிநாராயணன் கோயில் ராஜகோபுரத்தில் கவித்துவத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி பிரமோற்சவத்தின் போது இங்கு வழங்கப்படும் திருமாங்கல்யக் கயிற்றை வாங்கி பூஜை செய்து வந்தால், திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இங்குள்ள யோக ஆஞ்சநேயரை வணங்கினால் பில்லி, சூன்ய தொல்லைகள் அகலும். வெள்ளியினாலான கருடன் சிலையும் இங்குள்ளது.