பதிவு செய்த நாள்
12
மார்
2014
11:03
பழநி: பழநியில் நேற்று பலத்த காற்று வீசியதால், மலைக்கோயில் "ரோப்கார் அடிக்கடி நிறுத்தப்பட்டது. பழநி மலைக்கோயிலுக்கு எளிதாக பக்தர்கள் செல்லும் வகையில், "ரோப்கார், "வின்ச் கள் இயக்கப்படுகிறது. இதில், "ரோப்கார் காலை 7 முதல் இரவு 9 மணி வரை இயங்குகிறது. இதன் மூலம் மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் செல்லலாம், என்பதால் இதில் பயணம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று பழநியில் பலத்த காற்று வீசியதால், பகல் 11 மணிக்கு "ரோப்கார் நிறுத்தப்பட்டது.மதிய இடைவேளைக்கு பின்னும், காற்று குறையாததால் மாலை 4 மணி வரை இயங்கவில்லை. அதன்பின் காற்று குறைவாக வீசிய நேரங்களில் இயக்கப்பட்டது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""40 கி.மீ., வேகத்திற்கு அதிகமாக மலைப்பகுதியில் காற்று வீசுவதால், "ரோப்கார் இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. காற்று குறைந்தவுடன் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. டிக்கெட் பெற்று காத்திருக்கும் பக்தர்கள், வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர், என்றார்.