பதிவு செய்த நாள்
12
மார்
2014
11:03
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி பகுதியில், மூன்று ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்து போனதால், ஆறு, ஏரி, அணை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. ஆத்தூர் அருகே, அப்பமசமுத்திரம் பஞ்சாயத்து, புது உடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று முன்தினம் இரவு, வசிஷ்ட நதியில், ஒப்பாரி பாடல்களை பாடியபடி கும்மியடித்து பூஜை செய்தனர். முன்னதாக, ஒவ்வொரு வீடாக சென்று, பிச்சை எடுத்து வந்த சாப்பாட்டை, மழை வேண்டி பூஜை செய்த பின், பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.