ஆனைமலை: அனைமலைஅருகே பெத்தநாயக்கனுாரில் ராஜ கணபதி, கெளசலாம்பிக்கை சமேத பகவான் திருமலைசாமி கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது. ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனுார் கிராமத்தில் இன்று (12ம்தேதி) காலை 11.00 மணியிலிருந்து 11:30க்குள் ராஜகணபதி மற்றும் கெளசலாம்பிக்கை சமேத பகவான் திருமலைசாமி கோவில் நுாதன அஷ்டபந்தன கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. மூன்றாம் காலம் யாக பூஜையில் இன்று காலை 6.00 மணிக்கு கலச யாத்திரை, நாடி சந்தானம் நடக்கிறது. காலை11.00 மணிக்கு மகா கும்பாபிேஷகம், தச தரிசனம், மகா தீபாராதனையும் அதையடுத்து அன்னதானமும் நடக்கவுள்ளது.