Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நார்த்தாமலை முத்துமாரியம்மனுக்கு மார்ச் 23ம் தேதி பூச்சொரிதல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2014
11:03

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது. நாரத மாமுனி தவமிருந்து அம்பாளை வழிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும், 30ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. ஏப்ரல், 8ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல், 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக ஏப்ரல், 7ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பங்குனித் திருவிழாவை முன்னிட்டு நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும், 23ம் தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்காக புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகள் எடுத்துவந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துவருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar