திருவள்ளூர்: ஒத்தாண்டேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா, மார்ச் 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று தேர் உற்சவம் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.