காசிவிஸ்வநாதர் கோயிலில் யாகப் பெருவிழா இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2014 11:03
கம்பம்: கம்பம் காசிவிசாலாட்சி உடனுறை, காசிவிஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சித்திவிநாயகர் கோயிலில், மகாகணபதி மூலமந்திர சதுர் லட்சம் (நான்கு லட்சம்) யாகப் பெருவிழா இன்று துவங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும், இந்த மூலமந்திர ஜெப விழாவிற்காக, கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் மந்திரம் ஜெபிக்கப்படும். வரும் வியாழக்கிழமை காலை ஸ்ரீ கணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சதுர் லட்ச யாகப் பெருவிழாவை முன்னிட்டு நான்கு நாட்களும் வேத பாராயணம் நடக்கிறது.