கிள்ளை அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2014 12:03
கிள்ளை: கடலூர் மாவட்டம் சிதம்பரம், கிள்ளை அருகே வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.கிள்ளை அடுத்த புஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் வீட்டு எதிர்புறம் குளக்கரையோரம் உள்ள வேப்ப மரத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக பால் வடிந்து வருகிறது.பொதுமக்களுக்கு தகவல் தெரிந்ததும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்த ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். வயதானவர்கள் கும்பிட்டுவிட்டு செல்கின்றனர்.வேப்பமரத்தில் பால் வடியும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.