கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2014 12:03
காளையார்கோவில் : கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. மார்ச் 11ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அம்மன் தங்ககுதிரை வாகனத்திலும், தங்கரதத்திலும் வலம் வந்து அருள்பாலித்தார். நேற்று அதிகாலை அம்மனுக்கு சிற்பு அபிஷேகம் நடந்து, தேரில் எழுந்தருளினார். காலை 9 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. 20ம்தேதி தீர்த்தவாரி,மலர் பல்லாக்கு, அன்னதானம், அம்மன் விடையாற்றி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை நிர்வாகம் செய்து வருகிறது.