ருத்ராட்சத்தில் ஒருமுகம் முதல் 25 முகங்கள் வரை உண்டு. சிலர், ஒரே ஒரு ருத்ராட்சத்தையும், சிலர் மாலையாகவும் அணிய விரும்புவர். மாலையாக அணிய விரும்பினால், எல்லா ருத்ராட்சங்களின் முக எண்ணிக்கை ஒன்றாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஆறு முக ருத்ராட்ச மாலை அணிய விரும்பினால், எல்லாமும் ஆறு முகமாக இருக்கவேண்டும். முதன் முதலாக ருத்ராட்ச மாலை அணியும்போது, மகான் ஒருவரிடம் கொடுத்து வாங்குவது நல்லது. முடியாத பட்சத்தில் கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு அணிவித்து வாங்கி அணிந்து கொள்ளலாம்.