திருமணம் போன்ற சுபவிஷயம் தள்ளிக் கொண்டே போனால், அம்மனுக்கு கனிமாலை போடுவதாக வேண்டிக் கொள்வார்கள். கனிமாலை என்பது 9, 27, 48, 108 ஆகிய எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை மாலையாக்கி அணிவிப்பதாகும். இந்த வேண்டுதலால், காய் போல் ஆரம்ப நிலையிலுள்ள செயல்பாடுகள், அம்மன் அருளால் சீக்கிரமே பழமாகி நடக்கும் என்பது ஐதீகம். கோடை காலத்தில் அம்மனை குளிர்ச்சிப்படுத்தவும் இந்த வழிபாட்டைச் செய்வதுண்டு. வெள்ளியன்று கனிமாலை வழிபாடு செய்வது சிறப்பு. இந்த பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பர்.