திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், சந்தப்பேட்டை ஏரி அருகில், படவேடு ரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதிகாலை 3.30 மணிக்கு இரண்டாம்கால பூஜை, 4.30 மணிக்கு மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 6 மணிக்கு சுந்தரமூர்த்தி சிவாச்சாரியர்கள் தலைமையிலான வேதவிற்பண்ணர்கள் வேதமந்திரம் முழங்க ஆதிசங்கர் எம்.பி., தலைமையில் கோவில் மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கலைவாணி சக்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.