சாத்தான்குளம் ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2014 01:03
சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா மற்றும் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. முதல்நாளான வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 7மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், 8 மணிக்கு வருஷாபிஷேகம் மற்றும் இதர ஹோமங்கள், கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.