காரைக்கால்: காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவிலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையார் இறைவனின் காலடியில் அமர்ந்து ஆனந்த நடனத்தை பார்த்தபடி இறைவனை பாடும் நிலையை பெற்றது அம்மையார் ஐக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு அம்மையாருக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் வீதியுலா நடைபெற்றது. வீதியுலா வந்த அம்மையார், காரைக்கால் கைலாசநாதசுவாமி கோவிலை சென்றடைந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.