பதிவு செய்த நாள்
24
மார்
2014
11:03
புதுச்சேரி: கிருஷ்ணா நகர் சின்மயா சூர்யா கோவிலில் நடந்த சமஷ்டி காயத்ரி ஹோமத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணா நகர் சின்மயா சூர்யா கோவிலில் சமஷ்டி காயத்ரி ஹோமம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு, சூரிய கடவுளுக்கு அபிஷேகம், பூர்வாங்க பூஜைகள் நடந்தது. 7:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை 3 லட்சத்திற்கும் மேலாக காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு ஹோமங்கள் நடந்தன. 23 புரோகிதர்களின் வழிகாட்டுதலோடு 16 ஹோமகுண்டங்கள் வளர்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சின்மயா மிஷன் தலைவர் நடராஜன், செயலாளர் பாஸ்கரன், துணைத் தலைவர்கள் ராகவன், ஸ்ரீராம் சுப்ரமண்யா, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து, சின்மய சூர்ய கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.காயத்ரி ஹோமத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சூர்ய ஆராதனை மந்திரங்கள் அடங்கிய ஆராதனை புத்தகம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7:30 மணியளவில் பூர்ணாஹூதி, சாந்தி மந்திரங்களுடன் ஹோமம் நிறைவு பெற்றது. ராஜா சாஸ்திரிகள் மற்றும் அவரது வேதபாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சின்மயா மிஷன் புதுச்சேரி பொறுப்பாளர் சுருதி சைதன்யா மேற்பார்வையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.