செய்யும் தொழிலே தெய்வம்.. தொழில் செய்வதே பக்தியாகி விடும் அல்லவா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2014 05:03
இறைவனை அடையும் யோக முறைகளில் கர்மயோகம் என்பதும் ஒன்று. கர்ம யோகிகள் தொழிலில் ஈடுபடும் போது, மெய் வருத்தம் பாரார்; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார் என்றெல்லாம் சொல்வார்கள். நம்மைப் போன்ற சாமான்ய நிலையில் இருப்பவர்கள் வயிற்றுக்காக, அந்தஸ்துக்காக, பணத்துக்காக தொழிலைச் செய்கிறோம். தொழிலைக் கவனமாகச் செய்யும் உயர்ந்தவர்கள் பணியில் தெய்வத்தையே காண்பார்கள்.