Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை கோவில்களில் பிரதோஷ வழிபாடு! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்வதீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2014
11:03

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிக்கதிர் விழும் சூரிய பூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. காரைக்காலில் முற்காலத்தில் திருதெளிச்சேரி என அழைக்கப்பட்ட கோவில்பத்து கிராமத்தில் சுயம்புவர தபஸ்வினி அம்பிகை உடனமர் பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சூரிய பகவான் பூஜித்த ஏழு ஸ்தலங்களில் ஒன்றாகும். கி.பி.ஆறாம் நுாற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் சூரிய பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சூரிய பூஜை விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில், மாலை 5.30 மணிக்கு சூரியக் கதிர் கருவறையில் உள்ள மூலவர் பார்வதீஸ்வர் மீது விழுந்தது. அதையடுத்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய பூஜை விழா, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar