அய்யாவாடி மகா பிரத்தியங்கிராதேவி கோவிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2014 10:03
மயிலாடுதுறை: அய்யாவாடி, மகா பிரத்தியங்கிராதேவி கோவிலில், நிகும்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கு, அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. பங்குனி மாத அமாவாசையான நேற்று காலை, மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9:00 மணிக்கு அம்பாளை கோவில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றன. மதியம் 1.00 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில், மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர்.