காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெள்ளகுளம் பகுதியில் சந்தவெளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த ஆண்டு மூலவர் விமானம், ராஜகோபுரம், மகா மண்டபம் உள்ளிட்ட கட்டப்பணிகள் தொடங்கின. ஆனால் ஆரம்பம் முதலே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு கட்டடப்பணிகள் தடைப்பட்டன. மீண்டும் கட்டடப்பணிகள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது முறையான அனுமதியின்றி, பணி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் புதிய ஒப்பந்த பணி செய்யக் கூடாது என்று பணிகளை நிறுத்துமாறு அவர்கள் உத்தரவிடப்பட்டதால் பணிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.