கீழக்கரை : கீழக்கரை மகான் குத்பு செய்யது முகம்மது ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா, மார்ச் 1ல் கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 16ல் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன் தினம் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் உலக மக்களின் நன்மைக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின் தக்பீர் முழக்கத்துடன் கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை தர்கா டிரஸ்டி சதக்கத்துல்லா, விழா கமிட்டி மக்பூல் சுல்த்தான், சுல்த்தான் செய்யது இபுராகிம் ராஜா, சித்திக் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.