பதிவு செய்த நாள்
04
ஏப்
2014
12:04
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை உத்திராபதியார் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நாளை (5ம் தேதி காலை 7.00 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் நடக்கிறது.மாலை 5 மணிக்கு அஞ்குரார்பணம், ரக்ஷாபந்தனம் , கும்பலங்காரம், கலாகர்ஷணம், முதல்கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து 6ம் தேதி காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம் கோபூஜை, வடுபூஜை, கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. 9.25 மணிக்கு யாத்ராதானம், 9.35 மணிக்கு கடம் புறப்பாடு செய்து 10.00 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 11 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.