பெண்ணாடம் சிவசுப்ரமணிய சுவாமி மடலாயத்தில் பங்குனி உத்திர காவடி பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 12:04
பெண்ணாடம்: பெண்ணாடம் சிவசுப்ரமணிய சுவாமி மடலாயத்தில் 81வது பங்கு உத்திர காவடி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேறறு காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமம் 10.00 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதி உலாவும் நடந்தது. வரும் 12ம் தேதி மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம் துவங்குகிறது. 13ம் தேதி பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி காலை பெண்ணாடம் வெள்ளாற்றங்கரையில் இருந்து காவடி வீதியுலா, மடத்தில் தீபாராதனையும், 14ம் தேதி மாலை 6 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யண உற்சவம், 15ம் தேதி 7.30 மணியளவில் இடும்பன் பூஜை நடக்கிறது.