நாமக்கல்: நாமக்கல்லில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நடந்தது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுதர்மான் தெருவில் சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இக்கோவிலில் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.