ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2014 06:04
ராமநாதபுரம்: வழிவிடுமுருகன் கோயிலில் கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும். இத்தலத்தில் தான் சனீஸ்வரனின் தாய் சாயாதேவி மரம் வடிவில் அருள்பாலிக்கிறாள். இந்த மரத்துக்கும் சாயாமரம் என்ற பெயருண்டு. இக்கோயிலில் பங்குனிஉத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி வள்ளி,தெய்வானை விநாயநகருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.