தர்மபுரி: தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ ஆஞ்சநேய சாமி கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரு கிறது. விழாவையொட்டி நேற்று மாதவாச்சாரியார் திரு மண மண்டபத்தில் ராமர்- சீதா திருகல்யாண உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை கள், வழிபாடுகள் நடை பெற் றது. விழாவையொட்டி ராமர்- சீதா திருக்கல்யாண திரு வீதி உலா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.