பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
12:04
திருப்பாச்சூர் : பழைய திருப்பாச்சூர் செல்லியம்மன் கோவிலில், வரும், 14ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. கடம்பத்துார் அடுத்துள்ளது பழைய திருப்பாச்சூர். இங்குள்ள செல்லியம்மன் கோவிலில் வரும், 14ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. நாளை, 12ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு வர்ணிப்பு மாலை அணிவித்தலும், 13ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். வரும், 14ம் தேதி, காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு சந்தன அலங்காரமும், மாலை, 6:00 மணிக்கு படையல் இடுதலும், இரவு, 9:00 அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.