குலசை கோயிலில் நாளை திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 03:04
உடன்குடி : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் சிதம்பரேஸ்வரர்-சிவகாமி அம்மன் திருக்கல்யாண திருவிழா நாளை (ஏப்.12) துவங்குகிறது. விழாவையொட்டி காலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.13 ம் தேதி அதிகாலை 5- 6.10 மணிக்கு திருக்கல்யாண திருவிழா நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு திருப்பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.