நத்தம் கோட்டையூர் காளியம்மன் கோயில் பூக்குழி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 04:04
நத்தம்: கோட்டையூர் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.பங்குனி திருவிழாவைமுன்னிட்டு கும்பம் வைத்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டினர்.தொடர்ந்து விழாவில்அம்மன் அலங்காரமும்,அர்ச்சனையும் நடந்தது.பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும் பூக்குழி இறங்கி வழிபட்டனர். பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தனர். கலைநிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளைகோட்டையூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.