விழுப்புரம்: பங்குனி உத்திரத்தை யொட்டி திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்ட விழா நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தையொட்டி விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வர் கோவிலில் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா நாளை 12ம் தேதி நடக்கிறது. 42 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கபட்டுள்ள தேர் அன்று காலை 8:00 மணிக்கு வெள்ளோட்டம் விடப்படுகிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தேர் திருவிழாவை காண பல கிராமப்புற பக்தர்கள் வர விழுப்புரம் ரயில் நிலையம், பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், சிக்னல் ஆகிய இடங்களில் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேர் திருப்பணி பொறுப்பாளர் குபேரன், செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் சுரேஷ் செய்து வருகின்றனர்.