பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
04:04
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் செல்வ விநாயகர் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கன்னிமார்கள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி 8ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 12:00 மணிக்கு கன்னிமார்கள் சிலை, கரிக்கோலம், கண் திறப்பும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்க்ரஹணம், அங்குரார்பணம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, 9ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடிசந்தானம், 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு விமானம் மற்றும் கன்னிமார்களுக்கும், 10:30 மணிக்கு செல்வ விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.