பதிவு செய்த நாள்
11
ஏப்
2014
04:04
விழுப்புரம்: பொய்கைபாக்கம் லட்சுமி நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 13ம் தேதி பகவத் ராமானுஜர் சிலை பிரதிஷ்டை நடக்கிறது. விழாவையொட்டி இன்று (11ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, விஷ்வக்சேன ஆராதனை, வேதபிரபந்தம் நடக்கிறது. தொடர்ந்து நாளை (12ம் தேதி) காலை 7:00 மணிக்கு முதல்கால யாகபூஜை, 11:30க்கு பூர்ணாஹூதி, மாலை 4:00 மணிக்கு திருமஞ்சனம், 6:00க்கு துவாரபூஜை கும்ப ஆராதனம், தத்வந்யாஸ ஹோமம் நடக்கிறது. வரும் 13ம் தேதி காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், த்வாரபூஜை, ஹோமங்கள், 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கும்ப கடம் புறப்பாடு, 10:30க்கு பெருமாள் திருக்கல்யாணம், மாலை 6:00 மணிக்கு பெருமாள் திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வரதராஜ பெருமாள் கைங்கர்யா அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீதரன் செய்து வருகிறார்.