பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
11:04
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், நாளை (ஏப்.,13) பங்குனி உத்திர நட்சத்திரத்தையொட்டி, திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது.கடந்த 5ம் தேதி, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி ,நான்கு ரதவீதிகளும் சுற்றி வரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து விழா நாட்களில், காலை ஆண்டாள், ரெங்கமன்னார், மண்டபங்களுக்கு புறப்பாடும், இரவில் வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நாளை (ஏப்.,13 ) நடக்கிறது. இதையொட்டி, காலை 6.30 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னாரில் தேரில் எழுந்தருளுதலும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில் திருக்கல்யாண பட்டு புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு, ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. 17ம் தேதி வெள்ளிக்கிழமை குறடில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, ஊழியர்கள் செய்தனர்.