நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகை அருகே, நாகூர் தர்காவில், 457வது ஆண்டு கந்தூரி விழா, 1ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகையில் இருந்து, நேற்று முன்தினம் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, நேற்று அதிகாலை, நாகூர் வந்தது. பின், தர்காவில், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.