கடலூர்: கடலூர் வில்வநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் 57வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை 13ம் தேதி நடக்கிறது.கடலூர் வில்வநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3ம் தேதி காலை 3:00 மணிக்கு கணபதி ஹோமம், 4ம் தேதி விநாயகர் புறப்பாடும், 5ம் தேதி சுப்ரமணியர் புறப்பாடு, 6ம் தேதி இந்திர விமானத்தில் வள்ளி தெய்வானையுடனும், 7ம் தேதி பல்லக்கில் ஊர்வலமும், 8 மற்றும் 9ம் தேதி நாக வாகனத்திலும், 10ம் @ததி யானை, 11ம் @ததி மயில், குதிரை வாகனத்திலும் வீதியுலா நடந்தது. தொடர்ந்து நாளை 13ம் தேதி காலை 7:00 மணிக்கு பங்குனி உத்திரம், 108 காவடி மாட வீதியுலா நடக்கிறது. மறுநாள் 14ம் தேதி காலை 8:00 மணிக்கு தேர் புறப்பாடு நடக்கிறது.