பெண்ணாடம்; பெண்ணாடத்தில் புதிதாக கட்டப்பட்ட ராமர் பாதம் கோவிலுக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் கோவில் வளாகத்தில், புதிதாக ராமர் பாதம் அமைத்து கோவில் கட்டப்பட்டது. அதன் கும்பாபிஷேகம் நாளை (13ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி இன்று (12ம் தேதி) காலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை, எஜமான் சங்கல்பம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.நாளை (13ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, வேத திவ்ய பிரபந்தம், 9:00 மணியிலிருந்து 10:00 மணிக்குள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.