பதிவு செய்த நாள்
12
ஏப்
2014
02:04
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மேல்சித்தாமூர், பார்சுவநாதர் கோவிலில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, திருத்தேர் பவனி விழா இன்ற நடக்கிறது.
கடந்த 8-ம் தேதி, தர்ப்பக் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் காலை, சூரிய வாகனத்திலும், இரவு சந்திர வாகனத்திலும், 8-ம் தேதி தேவேந்திர வாகனத்திலும், 9-ம் தேதி நாக வாகனத்திலும், 10-ம் தேதி யானை வாகனத்திலும் பார்சுவநாதர் திரு வீதியுலா நடந்தது.
இன்று காலை 8:30 மணிக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல், மகா உற்சவம், இரவு 9:30 மணிக்கு தங்க விமானத்தில் மகாவீரர் பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மேல்சித்தாமூர் ஜீனகஞ்சி மடாதிபதி லட்சுமி மகா சுவாமிகள் தலைமையில் 1008 பார்சுவநாதர் திகம்பர் ஜெயிஞூ அறக்கட்டளை மற்றும் மேல்சித்தாமூர் ஷேத்ர வளர்ச்சி குழுவினர் செய்துள்ளனர்.