திருப்புத்தூர் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 12:04
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகேயுள்ள கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் நடந்தது. இளையாத்தங்குடியிலிருந்து, ஏப்.6ல், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்தில் கீரணிப்பட்டிக்கு எழுந்தருளி காப்புக் கட்டப்பட்டது. தொடர்ந்து பங்குனித் தேர் உற்சவத்தை முன்னிட்டு, இரவில் அம்மன் ரிஷப, அன்ன,சிம்ம,குதிரை வாகனங்கள், புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா வந்தார். பால் குடம் எடுத்து தினசரி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று,மாலை 4.45 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, அம்மன் தேரோட்டம் நடந்தது.