திருப்புல்லாணி கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 01:04
கீழக்கரை : திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் சுவாமி கோயிலில், பங்குனி பிரமோத்ஸவ விழா நிறைவடைந்தது. பங்குனி பிரமோத்ஸவ விழா ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஏப்., 14ல் தீர்த்தவாரி நடந்தது. பெருமாள் சுவாமி பெரிய திருவடியிலும்,ஸ்ரீ ராமர் சிறிய திருவடியிலும் ஆதி சேதுவுக்கு எழுந்தளினர். சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆஞ்சநேயர் கோயிலில் விசேஷ அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலையில் சுவாமி, ஸ்ரீராமர் வீதி உலா வந்து கோயிலில் மட்டையடி உற்சவம் நடந்தது. இரவு பெருமாள், சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்த பின் விழா நிறைவடைந்தது.இன்று ஏப்.,15ல் நாச்சிமார்களுடன் பெருமாள் சுவாமி வானமாமலை மடத்திற்கு எழுந்தருளுதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்தனர்.