பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 01:04
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.நேற்று திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் சன்னதி அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்.காலை 9.30 மணியளவில் கோயில் குள படித்துறையில் அங்குசத் தேவருக்கும் அஸ்திரதேவருக்கும் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.