சீர்காழி; நாகை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொள்ளிடம் முக்கூட்டில் இருந்து பிரமபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் கோவிலை வந்தடைந்ததனர். வசந்த மண்டபத்தில் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.