கன்னிவாடி : கோனூரில், வேலைஉறுதித்திட்ட பயனாளிகள், மழைவேண்டி பொங்கல் வழிபாடு நடத்தினர்.மழை வேண்டி யாகம் நடத்துதல், கிராமங்களில் திருவிழா, கோயில்களில் சிறப்பு வழிபாடு போன்றவை வழக்கம். கசவனம்பட்டி அருகே கோனூர் வேலை உறுதித்திட்ட பணியாளர்கள், மழை வேண்டி பொங்கல் வழிபாடு நடத்த திட்டமிட்டனர். பணியாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை மூலம், பொங்கல், பூஜை பொருட்களுக்கான செலவினங்களை மேற்கொள்ளப்பட்டு இருந்தன. மதிய உணவு இடைவேளையின்போது, கோனூர்-வெல்லம்பட்டி ரோட்டில் உள்ள, கன்னிமார் கோயிலில், பொங்கல் வைத்து வழிபட்டனர்.