இலுப்பூர், குடுமியான்மலையில் உள்ள சிகாகிரீஸ்வரர் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
கொடி ஏற்றிய நாள் முதல் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மண்டகப்படிதாரர்களின் சார்பில் வாண வேடிக்கை யுடன் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிறப்பம்சமாக சுவாமி தனது பரிவார தெய்வங்களுடன் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட தெப்ப வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.