வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் குட்லாடம்பட்டி அருவிக்கு அருகில் மழை வேண்டி யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில் ஜலஅக்னிகண்ட ஈஸ்வரலிங்கம் முன்பு அகத்தியர் ஜெனாசித்தர் தலைமையில் சதுரகிரி சண்முகம் சுவாமிகள், திருப்பரங்குன்றம் பண்டாரம் சுவாமிகள் மற்றும் வேதவிற்பனர்கள் வேதபாராயணம் மந்திரங்கள் முழங்கி யாகசாலை பூஜை செய்தனர்.