கோவை : ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவையிலுள்ள சர்ச்களில் சிறப்பு ஆராதனை நடந்தது. இயேசுநாதர் சிலுவையில் அரையப்பட்ட தினம், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அவர் மூன்றாம்நாள் ஞாயிறன்று உயிர்த்தெழுந்தார். அன்றைய தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கோவையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவையிலுள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.