பழநி: பழநி ரோப்கார் மூன்று நாட்கள் நிறுத்தபடவுள்ளதாக, கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி மலைக்கோயில், ரோப்கார் பராமரிப்பு பணி ஏப். 23 முதல் 25 வரை நடக்கிறது. ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்திலுள்ள, உருளைகள், கம்பிவடக்கயிறுகள் மாற்றி, ஆயில் கிரீஸ் இடுதல், பெட்டிகள் புதுப்பித்தல் போன்ற மராமத்துப்பணிகளை, கோயில் பொறியாளர்களுடன் இணைந்து கொல்கத்தா ரோப்வே நிறுவனப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதன்பின், ரோப்கார் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடைகற்கள் வைத்து, சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதில், பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்தபின்னர், ஏப்., 26 முதல் ரோப்கார் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக. இதையடுத்து மூன்று நாட்கள் ரோப்கார் இயங்காது என, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.